கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் மீன்சுருட்டி பகுதியில் உள்ள கடைவீதியில் சோதனை செய்தனர். இதையடுத்து நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியபோது, நெல்லித்தோப்பு மெயின் ரோடு தெருவை சேர்ந்த ரெங்கசாமி(வயது 70) என்பவரது கடையிலும், வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் தென்னவநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேரன்(35) என்பவரது மளிகை கடையிலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 ேபரையும் கைது செய்து, கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.