கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-07 19:09 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இடையார் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 45), உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர்(59) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்