புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, கரூர் ஏ.வி.பி. நகர் பகுதியில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் ரவி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட ஒரு டீக்கடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதன் உரிமையாளர் விஸ்வநாதன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.