லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் வேர்ஹவுஸ் பஸ்நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 பேர் அந்த பகுதியில் தனித்தனியாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் (வயது 58), அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வின்சென்ட் ஜார்ஜ் (55) என்பதும், லாட்டரி சீட்டு எண்களை காகிதத்தில் எழுதி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் பாலக்கரை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட காகிதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.