கஞ்சா விற்ற 2 பேர் கைது
அரகண்டநல்லூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்- இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் மகன் பிரபாகரன் (வயது 21) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து பிரபாகரன் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தவிர தப்பிச்சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.