கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2023-02-22 18:45 GMT

பீளமேடு

கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் அருண்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்