கஞ்சா விற்ற 2 பேர் கைது

முக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.

Update: 2023-02-12 19:45 GMT

முக்கூடல்:

முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் போலீசார் அரசன்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேல பாப்பாக்குடியை சேர்ந்த கருப்பசாமி (வயது 26), வேளார்குளத்தை சேர்ந்த முருகன் (24) ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போது, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்