கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-01 18:44 GMT

நெல்லை அருகே தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பள்ளி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மானூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்ததாக வாசுதேவநல்லூர் வேலாயுதபுரத்தை சேர்ந்த ராஜன் (24) என்பவரை மானூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா, ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்