கஞ்சா விற்ற 2 பேர் கைது
கழுகுமலை அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள அழகனேரியை ேசர்ந்த வீரபாண்டியன் மகன் கனிராஜ் (வயது 26). இவரும், கரடிகுளத்தை ேசர்ந்த பெருமாள்சாமி மகன் மாடசாமியும் (20), கரடிகுளம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கனிராஜையும், மாடசாமியையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.