கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-20 19:23 GMT

உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் 80 அடி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்ற சமயபுரம் அண்ணாநகர் பஜாரை சோ்ந்த சமயபுரம் ரவி என்கிற ரவிகுமாரை (வயது 30) கைது செய்தனா். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், ராம்ஜிநகர் அடுத்த மில்காலனி மாரியம்மன்கோவில் பகுதியில் கஞ்சா விற்ற சக்திவேல் (39) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்