கஞ்சா விற்ற 2 பேர் கைது

புதுக்கடை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-31 15:00 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அனந்தமங்கலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்து 5 பேர் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் 2பேர் மட்டுமே சிக்கினர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் புதுக்கடை அருகே உள்ள மூன்று மாவு பகுதியை சேர்ந்த அகின் (வயது 23), பைங்குளம் பகுதியை சேர்ந்த அஜின் (28) என்பதும், 5 பேரும் சேர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்க முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அகின், அஜின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த ரெக்ஸ் ரால் ஸ்டண் என்ற ராஜா (22), குருசுவிளை பிரதீப் (22) மற்றும் தென்னாட்டுவிளை ஜாண் (21) ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்