கஞ்சா விற்ற 2 பேர் கைது
போடி அருகே கஞ்சா விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் 1½ கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த அஜீத் பாண்டியன் (வயது 22), கோடாங்கிபட்டியை சேர்ந்த சிலம்பரசன் (36) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.