கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-03 22:48 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மங்காபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் செல்வராஜ் (வயது 68), இந்திரா (60) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5,500 மற்றும் 550 கிராம் கஞ்சா, கஞ்சா விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்