கஞ்சா விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2022-06-19 20:57 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நெசவாளர் காலனியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்திய ேபாது அவர்களிடம் 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் மேலராமன்புதூர் தங்கமாள் தெருவை சோ்ந்த வீரமணி (வயது 20), ராமன்புதூரை சேர்ந்த திபு (19) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனைதொடா்ந்து வீரமணி, திபு ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்