விபசாரம் நடத்திய 2 பேர் கைது

கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் மூலம் விபசார தொழில் நடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 3 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2023-10-05 19:30 GMT

கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் மூலம் விபசார தொழில் நடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 3 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் மூலம் விபசாரம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் மூலம் விபசார தொழில் நடந்து வருவதாக கும்பகோணம் சரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவுபடி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் மேற்பார்வையில் கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமாக சிலர் வந்து செல்வது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது அந்த வீட்டை திருபுவனம் பகுதியை சேர்ந்த லட்சுமி, பண்டரிகபுரம் பகுதியை சேர்ந்த பிரேமி ஆகிய 2 பேர் வாடகைக்கு எடுத்து 3 பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து லட்சுமி மற்றும் பிரேமி ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு தஞ்சையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்