'வாட்ஸ்-அப்'பில் வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ‘வாட்ஸ்-அப்’பில் வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது

Update: 2022-06-06 22:25 GMT

நெல்லை:

நெல்லை அருகே கங்கைகொண்டான் அணைத்தலையூரைச் சேர்ந்தவர்கள் வசந்தராஜா (வயது 25), காளிமுத்து என்ற குமுளி காளிமுத்து (19). இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தராஜா, காளிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்