கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மலைக்கோட்டை, ஜூன்.5-
திருச்சி கோட்டை போலீசார் இ.பி.ரோடு அந்தோணியார் கோவில்தெரு ஆர்ச் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று இருந்த வடக்குதாராநல்லூரை சேர்ந்த யோகானந்தம் (வயது 25), இ.பி.ரோடு சத்தியமூர்த்திநகரை சேர்ந்த செல்வம் (22) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.