அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-15 18:58 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராமராஜன் (வயது 48), ரவி (52) ஆகியோரிடம் சோதனை செய்தனர். அப்போது 2 சாக்குப்பைகளில் அனுமதியின்றி தலா 50 குரோஸ் கருந்திரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்