அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாாித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி டவுன் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் வழக்கமான அலுவல் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏ.எஸ்.கே. தங்கையாநாடார் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் உரிய அனுமதியின்றி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்த விமல்பிரபு (வயது 50), மீனம்பட்டியை சேர்ந்த சமுத்திரம் (50) ஆகியோர் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விமல்பிரபு, சமுத்திரம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.