அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-31 19:22 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி மற்றும் போலீசார் சீனிவாசா நகரில் ேசாதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த சரவணன் (வயது 27), மாரியப்பன் (59) ஆகியோரை கைது செய்து அவர்கள் பட்டாசு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்