சூதாடிய 2 பேர் கைது

அரக்கோணத்தில் சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-16 17:49 GMT


அரக்கோணம் பழனி பேட்டை பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டவுன் சப்- இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பழனிபேட்டை டி.என்.நகர், சோமசுந்தரம் நகர், உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழனிபேட்டை பகுதியில் பெட்டிக் கடை ஒன்றில் காட்டன் சூதாட்ட சீட்டுகளை காண்பித்து சிலரிடம் பணம் வசூலித்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த கருணா (வயது 48) என்பது தெரிய வந்தது. இதே போன்று பழனிபேட்டை பிரதான சாலை, புது பேட்டை ஆகிய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது பழனிபேட்டை அங்காளம்மன் கோவில் அருகே காட்டன் சூதாட்ட சீட்டுகளை வைத்து பணம் வசூலித்த பழனிபேட்டை பகுதியை சேர்ந்த குமார் (38) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிப்பட்ட இருவர் மீதும் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்