பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய 2 பேர் கைது

கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா். போலீஸ் வாகனம் மீது கல் வீசியவரும் சிக்கினார்.

Update: 2022-08-18 16:39 GMT

கள்ளக்குறிச்சி:

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியும் சூறையாடப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு குற்றப்புலனாய்வு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலவரத்தின்போது பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக சின்னசேலம் தாலுகா கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த சீனு மகன் ரஞ்சித், சேட்டு மகன் கோமதுரை, போலீஸ் வாகனம் மீது கல் வீசிய மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ஆகாஷ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் இன்று கைது செய்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 352 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்