காட்டன் சூதாடிய 2 பேர் கைது
வேலூரில் காட்டன் சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா மற்றும் போலீசார் கஸ்பா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வசந்தபுரம் இந்திராநகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என்பவர் வீட்டின் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் மேல்மொணவூர் பஸ் நிறுத்தம் அருகே காட்டன் சூதாடிய மேல்மொணவூரை சேர்ந்த சங்கரை (42) கைது செய்தனர்.