அனுமதியின்றி பட்டாசு கொண்டு சென்ற 2 பேர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் பிச்சாண்டிதெருவில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஜீப்பை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஜீப்பில் உரிய ஆவணங்கள் இன்றி சாட்டை வகை பட்டாசுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் இருந்த வீரக்குமார் (வயது 33), கலச்சியம்மாள் (32) ஆகியோரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.