வீடு புகுந்து பொருட்கள் சூறை 2 பேர் கைது

வடலூரில் வீடு புகுந்து பொருட்கள் சூறை 2 பேர் கைது

Update: 2022-10-10 18:45 GMT

வடலூர்

வடலூர் பார்வதிபுரம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன்கள் நித்திஷ்(22), சதிஷ்(27), சக்தி மற்றும் வினோத்குமார் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நித்திஷ் உள்ளிட்ட 4 பேரும் முன்விரோதம் காரணமாக முருகனின் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி, இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட முருகனின் மனைவியை அவர்கள் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திஷ், சதிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்