கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
நெல்லையில் கார் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்தவர் அர்ஷத் முகைதீன் (வயது 25). சம்பவத்தன்று இவர் தனது காரில் குடும்பத்தினருடன் எஸ்.என்.ஹைரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த இசக்கி கார்த்திக் (28) மற்றும் பாளையம்செட்டிக்குளத்தை சேர்ந்த நவீன் (22) ஆகியோர் அந்த வழியாக வந்தனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து அர்ஷத் முகைதீன் மற்றும் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து செல்வகணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இசக்கி கார்த்திக் மற்றும் நவீனை கைது செய்தனர்.