வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது
வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் ஊராட்சி பரப்பான்காட்டை சேர்ந்த தேவா (23) மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் (18) ஆகியோர் ஆலங்குடி அரச மரத்தடி பஸ் நிறுத்தத்தில் நேற்றிரவு நின்று கொண்டிருந்தனர். அப்போது கீழநெம்மக்கோட்டையை சேர்ந்த வினோத் (22), மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோர் மதுபோதையில் தேவா, ஆதிகிருஷ்ணன் ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், வினோத் ஆகியோரை கைது செய்தார்.