பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தென்னவநேரியை சேர்ந்தவர் சீனி நாடார் மனைவி முத்தம்மாள் (வயது 50). இவருக்கும், அவரது உறவினர்களான ஆறுமுக நாடார் மகன் துரைமுருகன் (33), வெற்றிவேல் நாடார் மகன் சுரேஷ்குமார் (27) ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முத்தம்மாளிடம் சொத்து பிரச்சனை குறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக் கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி துரைமுருகன், சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.