பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-25 20:33 GMT


உசிலம்பட்டி விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்குடியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டி கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (27) என்பவர் சரக்கு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அதை தொடர்ந்து அவருடன் வேனில் வந்த அஜித்குமார் (26), கவுதம் ஆகிய 3 பேரும் சேர்ந்து அங்கிருந்த ஊழியர் ஆசாத்அலியை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து விக்ரம் புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கவுதமை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்