பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாககார், ஸ்கூட்டரில் கடத்திய 346 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கார், ஸ்கூட்டரில் கடத்திய 346 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-31 18:45 GMT

ஓசூர்

வாகன சோதனை

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 320 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர், கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது29) என்பதும், பெங்களூவில் இருந்து குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 320 கிலோ குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்கூட்டர்

அதேபோல ஓசூர் சிப்காட் போலீசார் பெங்களூரு-ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த குமார் (48) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ குட்கா மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்