ஊத்தங்கரையில்கார் திருடிய 2 பேர் கைது

Update: 2023-05-18 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அடுத்த ஊணாம்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடி சென்றதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார்.

அதன்பேரில் துைண போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் உத்தரவின்பேரில் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடிவேல், பிரபாகரன், மணிவேலன் ஆகியோர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து காரை திருடி சென்றவர்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று அங்கு பதுங்கி இருந்த சீனிவாசன் (வயது 37), தம்பிசெட்டி உபேந்திரா (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்