வாளுடன் சுற்றிய 2 பேர் கைது

வாளுடன் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-15 18:45 GMT

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது படமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வாள் போன்ற ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பி.வேளாங்குளத்தை சேர்ந்த முத்துவேங்கை (வயது 28) மற்றும் 17 வயதுள்ள சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்