லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முகமது ஜாகீர் உசேன் (வயது34), திட்டச்சேரி உஸ்மானியா தெருவை சேர்ந்தவர் முகமது உமர் (35) ஆகிய 2 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளிமாநில தடைசெய்யப்பட்ட குயில், சிம்லா, ரோசா, தங்கம் உள்ளிட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோர் முகமது ஜாகீர் உசேன், முகமது உமர் ஆகியோரை கைது செய்தனர்.