பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கடவாசல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் திருக்கருகாவூரை சேர்ந்த சதீஷ் (வயது22), வசந்த் (20), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (21) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று மது அருந்தினர். அப்போது போதை அதிகமான நிலையில் அவர்கள் 3 பேரும் மதுக்கடை அருகே நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்த், சிலம்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய சதீசை வலைவீசி தேடி வருகிறார்கள்.