அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 பேர் கைது

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-09 18:16 GMT

வலங்கைமான் அருகே மன்னார்குடி மெயின் சாலையில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 லாரிகளில் மணல் ஏற்றி வந்ததை பார்த்த போலீசார் அவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை ஓட்டிவந்த நாகை மாவட்டம் பில்லாளி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது34), மாதவன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்