கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2022-06-07 15:22 GMT

பொங்கலூர்:

பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டி பாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி மகன் கலையரசன் (வயது 24). அதுபோல் பெருந்தொழுவு சி.எஸ்.ஐ காம்பவுண்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சைமன்ராஜ் (28). இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெருந்தொழுவு பகுதியில் சுற்றி திரிந்த இருவரையும் பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்