வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை

வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-11-14 18:45 GMT


வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வீரப்பன் கூட்டாளிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் குண்டேரிப் பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

இது குறித்து பங்களாபுதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த வீரப்பனின் அண்ணன் மாதையன், கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள், 3 பேரும் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

வீரப்பன் அண்ணன் சாவு

இதில், கோவை சிறையில் பல ஆண்டுகளாக இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப் பட்டார். அவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாதையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆனால் கோவை சிறையில் ஆண்டியப்பனும், பெருமாளும் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.

2 பேரும் விடுதலை

இந்தநிலையில் தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா வின் பிறந்தநாளையொட்டி கைதிகளை விடுதலை செய்யும் நடை முறைப்படி ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுப வித்து வந்த ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனால் ஆண்டி யப்பன் சேலம் மேட்டூருக்கும், பெருமாள் கர்நாடக எல்லையான கோபிநத்தத்தில் உள்ள சொந்த ஊருக்கும் சென்றனர்.

கிழ்ச்சி அளிக்கிறது

விடுதலையான ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கூறும் போது, நீண்டநாளாக சிறையில் இருந்த எங்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறைக்குள் குறிப்பிட்ட சிலருடன் தான் பேச முடியும். தற்போது விடுதலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் உள்பட பலரையும் சந்தித்து பேசவும், சுயமாக வாழவும் வழிவகை ஏற்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்