வேலைவாய்ப்பு முகாமில் 191 பெண்கள் தேர்வு

திருப்பத்தூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 191 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 18:30 GMT

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் 738 மகளிர் கலந்து கொண்டனர். அவர்களில் 191 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா முகாமை பார்வையிட்டு தேர்வு பெற்ற மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்