33 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 190 போலீசார் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் 33 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 190 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-05-10 19:48 GMT

நெல்லை மாவட்டத்தில் ஒரு போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார் மற்றும் ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்

அம்பை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய ஜெயலட்சுமி கல்லிடைக்குறிச்சிக்கும், சந்திரன், முப்புடாதி ஆகியோர் வீரவநல்லூருக்கும், பாப்பாக்குடியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய மாரியப்பன் அம்பைக்கும், கோமதிநாயகம் மணிமுத்தாறுக்கும், விக்கிரமசிங்கபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகிலன் கல்லிடைக்குறிச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வீரவநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரத்திற்கும், ஏர்வாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணபெருமாள் விஜயநாராயணத்திற்கும், தேவர்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சிவந்திபட்டிக்கும், கங்கைகொண்டான் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கும், செந்தில்குமார் மானூருக்கும், சீதபற்பநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவல்லி மானூருக்கும், சீவலப்பேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் சிவந்திபட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

பாளையங்கோட்டை

சிவந்திபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சீவலப்பேரிக்கும், தாழையூத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் பாளையங்கோட்டை தாலுகாவுக்கும், பாளையங்கோட்டை தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பாராணி, மாவட்ட குற்ற ஆவண பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மோப்பநாய் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்ராஜ், மாடசாமி ஆகியோர் தாழையூத்துக்கும், முத்துகிருஷ்ணன் திருக்குறுங்குடிக்கும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு சீதபற்பநல்லூருக்கும், ஆதிமூலம் மூலைக்கரைபட்டிக்கும், மம்மது நாங்குநேரிக்கும், சேக் முகமது சிராஜிதீன் பாளையங்கோட்டை தாலுகாவுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார் மூன்றடைப்புக்கும், ஸ்ரீரங்கபெருமாள் முன்னீர்பள்ளத்திற்கும், கூடங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு ராதாபுரத்திற்கும், பேரின்பராஜ் திசையன்விளைக்கும், மணி பணகுடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பிரிவு

மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சிவந்திபட்டிக்கும், ராதாபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பழவூருக்கும், உவரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜேம்ஸ் ராதாபுரத்திற்கும், முருகன் பணகுடிக்கும், வள்ளியூர் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வள்ளியூருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

மேலும் ஏட்டுகள் உள்ளிட்ட போலீசார், மகளிர் போலீசார் என மொத்தம் 190 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்