கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், அரசின் இலவச நலத்திட்ட உதவியை பெறுவதற்காக நடந்த நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Update: 2022-08-24 18:23 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், அரசின் இலவச நலத்திட்ட உதவியை பெறுவதற்காக நடந்த நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

நேர்காணல்

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை வாகனத்தில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் தூக்கி வந்து நேர்காணலில் பங்கேற்க வைத்தனர்.

190 பேர் பங்கேற்பு

மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாற்றுத்திறனாளி நலஅதிகாரி பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. இதில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் உடல் தகுதியை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்