சிவகாசி மாணவர்களுக்கு 19 பதக்கங்கள்

ேதசிய அளவிலான ேபாட்டியில் சிவகாசி மாணவர்களுக்கு 19 பதக்கங்கள் வென்றனர்.

Update: 2023-02-09 19:04 GMT

சிவகாசி,

மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்களுக்கு என சைலண்ட் ஒலிம்பியாட்-2023 என்ற தலைப்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள செவித்திறன் குறைவுடைய மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மாணவி பிரேமா 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தலா 1 தங்கம் வென்றார். கற்குவேல் கவிதா குண்டு எறிதல் போட்டியில் தங்கம் பெற்றார். மாணவன் நிதேஷ் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். செஸ் போட்டியில் மாணவன் மணிகண்டராஜா தங்கம் வென்றார். இதேபோல் இந்த பள்ளி சார்பில் கலந்து கொண்ட 7 பேருக்கு வெள்ளி பதக்கமும், 6 பேருக்கு வெண்கல பதக்கம் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்தது. சாதனை மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிம்சன் பெஞ்சமின் தங்கராஜ், தலைமையாசிரியர் பால்ராஜ், பயிற்சியாளர்கள் கிறிஸ் டோபர், பரிபூரணம் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்