180 குவாரிகள் வேலை நிறுத்தம்
180 குவாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கல்குவாரி உரிமையாளர்கள் கனிமவள திருட்டை தடுக்க வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கைகளை கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 133 கல் குவாரிகளும், 47 எம்சாண்ட் குவாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த குவாரிகளில் 4 ஆயிரத்து 800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.