180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

விராலிமலையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-23 18:59 GMT

விராலிமலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் விராலிமலை போலீசார் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை வழியாக சென்ற சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு ஆட்டோவில் 180 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் திருச்சியை சேர்ந்த திலக்குமார் (வயது 45), மணிகண்டன் (42), முருகன் (30), ராஜா (38) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்