திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வீராங்கனைகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வீராங்கனைகள் பங்கேற்பு
தளி
சென்னையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் வருகின்ற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் திருப்பூர் மாவட்ட மகளிர் ஆக்கி அணியினர் பங்கேற்று விளையாட உள்ளனர். மாவட்ட அளவிலான இந்த அணி சார்பில் உடுமலை ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 9 வீராங்கனைகளும், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியைச் சேர்ந்த 6 வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். போட்டிக்கு தேர்வான வீராங்கனைகளுக்கு நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி நடைபெற்றது.
இதில் மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.மாவட்ட ஆக்கி அணி நிர்வாகிகள் வீராங்கனைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.அணியின் பயிற்சியாளராக தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகதீஸ்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.