ரூ.18 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி; துணை மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை தச்சநல்லூரில் ரூ.18 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணியை துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் 1-வது வார்டு மல்லிகை தெருவில் புதிதாக வாறுகால் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அங்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாறுகால் அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பகுதி சபா தலைவர் சீனிவாசன், முத்துரங்கராஜ், மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் திருமலைநம்பி, பிச்சுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.