உடுமலை பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்து 18 ஆடுகள் செத்தன.
உடுமலை பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்து 18 ஆடுகள் செத்தன.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் மீண்டும் மர்ம விலங்கு கடித்து 18 ஆடுகள் செத்தன.
18 ஆடுகள் சாவு
உடுமலையையடுத்த பெரிய கோட்டை ஊராட்சிக்கு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம விலங்குகளால் ஏராளமான ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இந்த நிலையில் சின்னவீரன்பட்டி புஷ்பகிரி வேலன் நகரைச் சேர்ந்த விவசாயி சவுந்தரராஜன் என்பவரது வீட்டை ஒட்டிய பட்டிக்குள் நேற்று முன் தினம் புகுந்த மர்ம விலங்குகள் பட்டிக்குள் இருந்த 18 ஆடுகளையும் கடித்துக் குதறியுள்ளது. ஆடுகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடித்ததுடன், உடல் பாகங்களையும் கடித்துத் தின்றுள்ளது. இதில் 18 ஆடுகளும் செத்தன.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் இறந்த ஆடுகளை குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் கூறும்போது " கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்பட்டு கூட்டமாக வரும் நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து கொன்றுள்ளன. அந்த நாய்களைப் பிடிக்க உள்ளாட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மர்ம விலங்குகள் அட்டகாசம் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் காலத்தில் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் சாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இந்திராநகரை விவசாயி ஈஸ்வரன் தோட்டத்தில் 8 ஆடுகள், உடுமலை-தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் 72 ஆடுகள், வெற்றிவேல்நகர் மாரிமுத்து பட்டியில் 4 ஆடுகள், மாசாணி அம்மன் நகர் விவசாயி பொன்ராஜ் பட்டியில் 6 ஆடுகள் என மர்ம விலங்குகளின் ரத்த வேட்டை தொடர்ந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடை வளர்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
அதன்பின்னர் பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர்.இதில் கூட்டமாக திரியும் தெரு நாய்கள் தான் ஆடுகளைக் கடித்து ரத்தம் குடித்துள்ளது என்று உறுதியாக கூறினர்..மேலும் கடந்த சில மாதங்களாக ஆடுகளைக் கொல்லும் மர்ம விலங்குகளின் நடமாட்டம் இல்லாததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் மர்ம விலங்குகளின் அட்டகாசம் தொடங்கியுள்ளது விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.