அம்மன் கோவிலில் 18 குத்துவிளக்குகள் திருட்டு
நித்திரவிளை அருகே அம்மன் கோவிலில் 18 குத்துவிளக்குகள் திருடு போயின.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே அம்மன் கோவிலில் 18 குத்துவிளக்குகள் திருடு போயின.
நித்திரவிளை அருகே உள்ள வாவறை கோபுரகாடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இசக்கியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ராஜமணி என்பவர் ஞாயிற்றுக்கிழமைதோறும் பூஜை செய்வது வழக்கம். ராஜமணி நேற்று முன்தினம் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 3 பெரிய குத்துவிளக்கு உள்பட 18 குத்து விளக்குகள், மணி, பூஜை பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜமணி நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.