௧,768 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,768 பேர் குரூப்-1 தேர்வு எழுதியதாக கலெக்டர் லலிதா கூறினார்.

Update: 2022-11-19 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,768 பேர் குரூப்-1 தேர்வு எழுதியதாக கலெக்டர் லலிதா கூறினார்.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் துணை கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலை எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வு 10 மையங்களில் நடந்தது. மயிலாடுதுறை நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப்-1) முதல்நிலை எழுத்துத் தேர்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை கண்காணிப்பதற்கு 2 பறக்கும்படை அலுவலர்கள், 3 சுற்றுக்குழு, 10 தேர்வுக்கூட முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 ஆய்வு அலுவலர்கள், 11 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்பாடுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 2 ஆயிரத்து 805 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,768 பேர் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். 1,037 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்