வங்கிக்கணக்கில் இருந்து ரூ.17 ஆயிரம் திருட்டு

வங்கிக்கணக்கில் இருந்து ரூ.17 ஆயிரம் திருடு போனது.

Update: 2022-10-08 19:00 GMT


அய்யலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 56). இவர் அய்யலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இவர், வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கியதற்காக வழங்கப்பட்ட ஏ.டி.எம். கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக அந்த வங்கி சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம். கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவர உதவுவதாக கூறி அவரிடம் இருந்து கார்டை வாங்கினார். பின்னர் அதனை எந்திரத்தில் செலுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவந்த அவர், ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிந்துகொண்டார். பின்னர் அவருடைய ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


இதற்கிடையே கடந்த 7-ந்தேதி வங்கிக்கு சென்ற அழகுசுந்தரம் தனது சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்தார். அப்போது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.17 ஆயிரம் மாயமாகி இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் அதுகுறித்து விசாரித்த போது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தன்னிடம் உள்ள ஏ.டிஎம். கார்டை எடுத்து அவர் பார்த்த போது தான் அது வேறு ஒருவருடைய ஏ.டி.எம். கார்டு என்பதும், ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் வந்த நபர் அவருடைய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வடமதுரை போலீசில் அழகுசுந்தரம் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்