பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்

ஆலங்காயம் பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்கு மரங்கலை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

Update: 2023-10-05 18:33 GMT

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உரிய அனுமதி பெறமால் பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்டு வந்த பல லட்சம் மதிப்பிலான 17 தேக்குமரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்